இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா செய்துள்ளார். மோகித் ஜோஷி டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை பங்குச் சந்தைக்கு இன்போசிஸ் அளித்துள்ள அறிக்கையில், மோகித் ஜோஷி மார்ச் 11 முதல் விடுப்பில் இருப்பார் என்றும், நிறுவனத்தில் ஜூன் 09, 2023 வரை அவர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் டெக் மகேந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்க இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. அந்த நிறுவனத்தில் வரும் டிசம்பர் 20, 2023-ல் இருந்து டிசம்பர் 19, 2028 வரை பொறுப்பு வகிப்பார் என்று தெரிய வந்துள்ளது.