விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த் நாராயண். 9 வருடங்களுக்கு பிறகு, இங்க நான் தான் கிங்கு என்ற திரைப்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார்.
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் சுஸ்மிதா அன்புச்செழியன் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் சந்தானம் தான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
மேலும், இதுதொடர்பாக பதிவிட்ட அவர், “எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்” என்று கூறியுள்ளார்.