திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
வெள்ளக்கோவில் பகுதிக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக, 134 பாசன சபை தலைவர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அதில், தங்களுக்கு கூடுதல் நாள்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் வற்புறுத்தியபோது, மற்ற விவசாயிகள் பழைய நடைமுறைப்படியே தண்ணீர் திறக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து, பொள்ளாச்சி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர்.