காஞ்சிபுரம் அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு, அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக வரும் திங்கட்கிழமை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க, மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏகானாபுரத்தில் நேற்று கண்டன ஊர்வலம் நடத்திய அவர்கள், விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். வரும் 17-ந்தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
அன்றைய தினம் 13 கிராமங்களை சேர்ந்த மக்களும், ஊர்வலமாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிடவும் முடிவு செய்திருக்கின்றனர்.