109 பயிர் ரகங்களை டெல்லியில் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
புதுடெல்லி உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 34 களப் பயிர்கள் மற்றும் 27 தோட்டப் பயிர்கள் உள்பட 61 பயிர்களில் 109 ரகங்களை பிரதமர் அறிமுகம் செய்துள்ளார். அப்போது விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடியதுடன், விளைநிலங்களை பார்வையிடவும் செய்தார்.
109 ரகங்களில், களப் பயிர்களில் சிறுதானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிர்களில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், சணல், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.