ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய குஜராத் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு, 214 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, விளையாடிய சென்னை அணி, விறுவிறுவென ரன்களை சேர்த்து, இறுதியில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை, தோனியை தவிர, மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும், தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறு இருக்க, போட்டி அனைத்தும் முடிந்த பிறகு, தோனியிடம் ஐ.பி.எல் கோப்பை வழங்கப்பட்டது. ஆனால், அதனை வாங்க மறுத்த தோனி, ஜடேஜாவையும், அம்பத்தி ராயுடுவையும், கோப்பையை வாங்க வைத்தார்.
இதற்கான காரணம் என்னவென்றால், அம்பத்தி ராயுடு, தனது கடைசி ஆட்டத்தை, சென்னை அணிக்காக விளையாடி இருந்தார். இந்த ஆட்டத்தில், அவரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. இதனை சிறப்பிக்கும் வகையில், கோப்பையை அம்பத்தி ராயுடுவை பெற வைத்தார் தல தோனி. அவரது இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.