Connect with us

Raj News Tamil

2024 ஐ.பி.எல் போட்டி.. விராட் கோலி முதல் சுனில் நரேன் வரை.. யார் யாருக்கு என்னென்ன விருது?

விளையாட்டு

2024 ஐ.பி.எல் போட்டி.. விராட் கோலி முதல் சுனில் நரேன் வரை.. யார் யாருக்கு என்னென்ன விருது?

ஆரம்பத்தில் இருந்து ப்ரீ க்ளைமேக்ஸ் வரை விறுவிறுப்பாக சென்ற ஒரு திரைப்படம், இறுதி காட்சியில் சொதப்பினால் எப்படியான உணர்வு இருக்குமோ, அப்படி தான் இந்த ஐ.பி.எல் 2024 முடிந்தது.

ஆம், நேற்று நடந்த இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எச் மற்றும் கே.கே.ஆர் மோதின. இந்த போட்டியில், வெறும் 113 ரன்கள் எடுத்த எஸ்.ஆர்.எச், மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது.

ஆனால், அதற்கு அடுத்த களமிறங்கிய கே.கே.ஆர், வெறும் 11 ஓவர்களிலேயே, ஒட்டுமொத்த ரன்னையும் எடுத்து, அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள், உப்புசப்பு இல்லாமல் சென்ற முதல் ஐ.பி.எல் இறுதிப் போட்டி என்று கருத்து கூறினர்.

சரி நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தற்போது, யார்? யாருக்கு எந்தெந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்…

Orange Cap:-

தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முன்பே சில விருதுகள் முடிவு செய்யப்பட்டுவிடும். அந்த வகையில், இந்த முறை, ஆரஞ்சு கேப் விராட் கோலிக்கு ஏற்கனவே எடுத்து ஓரமாக வைக்கப்பட்டுவிட்டது.

அதாவது, இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய விராட், 15 போட்டிகளில், 741 ரன்கள் எடுத்திருந்தார். சராரியாக, 61.75 ரன்களை அவர் வைத்திருந்தார். இவரது இந்த அதிரடி ஆட்டத்தையொட்டி, ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டுள்ளது.

Purple Cap:-

பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹர்ஷல் படேல், 24 விக்கெட்டுகளை எடுத்து, இந்த சீசனுக்கான பர்பில் கேப்-ஐ பெற்றுள்ளார். இவருக்கு, கே.கே.ஆர் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கும் இடையே, மிகவும் நெருக்கமான போட்டி இருந்தது. ஆனால், வருண் சக்கரவர்த்தி கடைசியில் 21 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து, பர்பில் கேப்-ஐ தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Emerging Player of the Season:-

சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டி, Emerging Player of the Season என்ற விருதை பெற்றுள்ளார். இவர், இந்த தொடரில், 303 ரன்களையும், 3 விக்கெட்டுக்களையும் எடுத்திருந்தார்.

மற்ற விருதுகள்:-

இவ்வாறு சிறப்பாக விளையாடிய பலருக்கும், ஐ.பி.எல் நிர்வாகம் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

1. The Fair Play Award – சன் ரைசர்ஸ் ஐதராபாத்

2. இந்த சீசனின் சிறந்த கேட்ச் விருது – KKR அணியின் ராமன்தீப் சிங்

3. இந்த சீசனின் மதிப்பு மிக்க வீரர் விருது – சுனில் நரேன் ( இவர் இந்த தொடரில், 17 விக்கெட்டுகளையும், 488 ரன்களையும் எடுத்திருந்தார். )

4. Best Pitch and Ground of the Season – ஐதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன்

5. Ultimate Fantasy Player of The Season: சுனில் நரேன்

6. Most 4s: ட்ராவிஸ் ஹெட் (64)

7. Most 6s: அபிஷேக் சர்மா (42)

8. Striker of the season: ஜேக் ஃப்ரேசர்-மெக்-கர்க் (234.04)

9. Runners-up award: SRH

10. Winners: KKR

    More in விளையாட்டு

    To Top