Connect with us

Raj News Tamil

ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகள்.. ஆனால் ஏன் Playoff சுற்றுக்கு இன்னும் போகல?

விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகள்.. ஆனால் ஏன் Playoff சுற்றுக்கு இன்னும் போகல?

2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முந்தைய தொடர்களில், சுமாராக விளையாடிய அணிகள், இந்த முறை பட்டைய கிளப்பி வருகின்றன.

இவ்வாறு இருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 16 புள்ளிகளை பெற்ற பிறகும், இன்னும் Playoffs சுற்றுக்கு ஏன் முன்னேற முடியவில்லை என்பதை தற்போது பார்க்கலாம்…

ஆரம்பத்தில் இருந்தே அருமையாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 9 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இதில், 8 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற அந்த அணி, வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது.

இதன் வழியாக, மொத்தமாக 16 புள்ளிகளை தன்னிடம் வைத்துள்ளது. ஒரு யூகமாக இந்த அணி Playoffs-க்கு தகுதி பெற்றுவிடும் என்று கூறினாலும், சில முட்டுக் கட்டைகள் உள்ளன. அது என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தவிர, மற்ற அனைத்து அணிகளுக்கும், கணித அடிப்படையில், 16 புள்ளிகளை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள், இவ்வாறு 16 புள்ளிகளை பெறுவதற்கு, மீதமுள்ள 5 போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள், மீதமுள்ள போட்டிகளில், ஒரே ஒரு போட்டியை தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.

இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது போட்டிகளில், இரண்டு போட்டிகளில் தோற்கலாம். அதற்கு மேல், அனைத்து போட்டிகளிலும், அவர்கள் நிச்சயம் வென்றாக வேண்டும்.

இறுதியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளும், வலுவான அணிகளாக இருந்து வருகின்றன. இந்த இரண்டு அணிகளும், 8 போட்டிகளில், இதுவரை 5-ல் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த அணிகளுக்கான Playoffs சுற்றுக்கான விவகாரம் சற்று குழப்பமானதாக தான் உள்ளது.

Playoffs-க்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயணம், தற்போது பாதுகாப்பானதாக இருந்தாலும், அது உறுதி செய்யப்படவில்லை. அதனை உறுதி செய்வதற்கு, நடைபெற இருக்கும் 5 போட்டிகளில், அவர்கள் இன்னும் ஒரே ஒரு போட்டியில் நிச்சயம் வெல்ல வேண்டும்.

ஆனால், அந்த 5 போட்டிகளில், 3 போட்டிகள் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற வலுவான அணிகளுடன் நடக்க உள்ளது. இந்த சூழ்நிலையில், ஒரே ஒரு போட்டியில், தோல்வி அடைந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான வாய்ப்பு, பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சிலமுறை இந்த மாதிரி ஆரம்ப கட்டங்களில் சிறப்பாக விளையாடிய அணியும், இறுதிக்கட்டத்தில் Playoffs சுற்றில் தகுதியடைய முடியாத நிகழ்வுகளும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீதமுள்ள லீக் போட்டிகளின் விவரம் பின்வருமாறு:-

1. மே 02 :- RR vs Sun Risers Hyderabad

2. மே 07 :- RR vs Delhi Capitals

3. மே 12 :- RR vs Chennai Super Kings

4. மே 15 :- RR vs Punjab Kings

5. மே 19 :- RR vs Kolkata Knight Riders

    More in விளையாட்டு

    To Top