Connect with us

Raj News Tamil

தொடங்குகிறது ஐபில்..! தேதி அறிவிப்பு..!

விளையாட்டு

தொடங்குகிறது ஐபில்..! தேதி அறிவிப்பு..!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கும் எனவும், தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனவும் ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது; ஐபிஎல் தொடரை வருகிற மார்ச் 22 முதல் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

முதற்கட்டமாக சில போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிடுவோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றார். இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியே தலைமை தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது

More in விளையாட்டு

To Top