Connect with us

ஐபிஎல்: 287 ரன்கள் குவித்த SRH; கடைசி வரை போராடி வீழ்ந்த RCB!

விளையாட்டு

ஐபிஎல்: 287 ரன்கள் குவித்த SRH; கடைசி வரை போராடி வீழ்ந்த RCB!

நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது.

ஹைதராபாத் அணி சார்பில் முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஜோடி அதிரடி துவக்கத்தை கொடுத்தது. அபிஷேக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹென்ரிக் கிளாசென், ஹெட்டுடன் கை கோக்க, அந்த பார்ட்னர்ஷிப் பெங்களூரு பவுலிங்கை வெளுத்து வாங்கியது.

ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4-வது பேட்டராக எய்டன் மார்க்ரம் களம் இறங்க, கிளாசென் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 67 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அடுத்து விளையாட வந்தார் அப்துல் சமத். ஓவர்கள் முடிவில் மார்க்ரம் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32, சமத் 10 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் லாக்கி ஃபெர்குசன் 2, ரீஸ் டாப்லி 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 288 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பெங்களூரில் விராட் கோலி 20 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் சேர்க்க, கேப்டன் பிளெஸ்ஸிஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் விளாசினார்.

அடுத்து வந்த வீரர்கள் சொர்ப ரன்களில் ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் வழக்கம் போல் தனியொருவராக போராடி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் விளாசி வீழ்ந்தார். நடப்பு சீசனில் மிக தூரமான சிக்ஸரை (108 மீட்டர்) விளாசி அவர் சாதனை படைத்தார்.

20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது பெங்களூரு. அதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்களில் வெற்றி பெற்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top