ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை ஞாயிற்றுக்கி ழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, ஏப்.8 (இன்று), 23, 28, 1,24,26 ஆகிய நாள்கள் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், மே 12-ஆம் தேதி மட்டும் நண்பகல் 1 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்து வாக னங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்லலாம். வாலாஜா சாலை யில் இருந்து வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்ல அனு மதி இல்லை. பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்படும்.
பாரதி சாலை பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங் கள் செல்லலாம். வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சாந்திப்பிலி ருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள், நேராக ரத்னா கஃபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதேபோல ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங் கள் பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வாகன நிறுத்த அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், மெரீனா கடற்கரையின் உட்புறச் சாலை யில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.