சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் குமரேசன். 34 வயதாகும் இவர், நேப்பியர் பாலம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ, பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பலத்த காயம் அடைந்த குமரேசன், ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில், காரில் அவ்வழியாக வந்துக் கொண்டிருந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆம்புலன்ஸிற்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தார்.
இதையடுத்து, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் குமரேசன் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்டது என்று தெரிந்தவுடன், உடனே உதவி செய்ய வந்த தலைமை செயலாளர் இறையன்பை, சமூகதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.