என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஐ.அஹமத். இந்த படங்களுக்கு பிறகு, ஜெயம் ரவியை வைத்து, இறைவன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த திரைப்படம், வரும் 28-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை சென்சார் செய்வதற்காக, அதிகாரிகளுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது, படத்தை பார்த்த அவர்கள், மிரண்டு போய்விட்டார்களாம். அந்த அளவிற்கு வன்முறை காட்சிகளும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
இதனால், 2 இடங்களை மட்டும் தூக்க சொல்லிவிட்டு, படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்களாம். இந்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் அதிகரிக்க செய்துள்ளது.