ஒவ்வொரு ஆடையாக கழற்றிய பிரபல நடிகை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் இருந்ததாக இளம்பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து ஹிஜாபுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் நடிகை எல்னாஸ் நோரூசி என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ஹிஜாப் அணிந்து வந்த அவர், தன்னுடைய ஒவ்வொரு ஆடையாக கழற்றினார்.

மேலும், ஒவ்வொரு பெண்ணும் அவள் விரும்பும் உடையை அணிய உரிமை வேண்டும் என்றும், ஜனநாயகம் என்றால் முடிவெடுக்கும் அதிகாரம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நான் நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை, உடை சுதந்திரத்தை ஊக்குவிக்கிறேன் என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.