பார்த்திபனை அசிங்கப்படுத்திய அமேசான்! உண்மை இதுதான்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களின் மூலம், பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர் பார்த்திபன். அந்த வகையில், மற்றொரு சோதனை முயற்சியாக வெளியான திரைப்படம் இரவின் நிழல்.

உலகின் முதல் சிங்கில் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்ற டேக் லைனோடு தான் இந்த திரைப்படம், விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வகையிலான திரைப்படம் ஏற்கனவே வெளியாகியுள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதில், இது இரண்டாவது சிங்கில் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், பார்த்திபன் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.