இரவின் நிழல் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் சொற்ப இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன். ஒத்த செருப்பு படத்தின் வெற்றிக்கு பிறகு, இரவின் நிழல் என்று படத்தை, இவர் எடுத்திருந்தார்.

முதல் நான் லீனியர் சிங்கில் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை பெற்ற இந்த திரைப்படம், ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. இந்த படத்தை திரையரங்குகளில் காண முடியாத ரசிகர்கள், ஒடிடியில் வெளிவந்த பிறகாவது பார்க்கலாம் என்று காத்திருந்தனர்.

ஆனால், நீண்ட நாட்களாகியும் இந்த திரைப்படம் ஒடிடியில் வெளியாகவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பதிவிட்டுள்ள பார்த்திபன், இன்று அல்லது நாளைக்குள், அமேசான் ஓடிடி தளத்தில் இரவின் நிழல் வெளியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.