மீண்டும் தொடங்கியது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்!

ரயில்களின் பயண நேரம், வசதி, டிக்கெட் விலை உள்ளிட்ட காரணங்களினால் மக்கள் பேருந்தை விட ரயிலையே தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே துறை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதள சேவை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனை ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்க மூலம் உறுதி செய்தது.

அதில், ‘தொழில்நுட்ப காரணங்களால் இ-டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் முன்பதிவு இணையதள சேவை தொடங்கப்படும்’ என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் இணையதளம் செயல்பட துவங்கியது.

RELATED ARTICLES

Recent News