இர்பானை மன்னிக்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது. இந்தமுறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும், விடமாட்டோம். அவர் மன்னிப்புக் கேட்டாலும், அதை ஏற்க முடியாது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. மருத்துவர் நிவேதிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சியை தொடர தடை விதிக்க மருத்துவ கவுன்சில் சார்பில் பரிந்துரைக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்.” என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News