கடற்கன்னிகள் இருப்பது உண்மையா? வைரலாகும் ஆச்சரிய வீடியோ!

இந்த உலகத்தில் பல்வேறு விநோதமான நம்பிக்கைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அந்த விநோதமான நம்பிக்கைகள் உண்மை என்பதற்கான சான்றுகள், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

யுனிகார்ன், கடற்கன்னிகள், குள்ளமாக இருக்கக் கூடிய மனிதர்கள், டிரேகன், யாழி ஆகிய உயிரினங்கள் இருப்பதற்கான சான்றுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த உயிரினங்கள் உள்ளது என்று ஒருசில பொதுமக்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

இதில் குறிப்பாக, கடற்கன்னிகள் தொடர்பான நம்பிக்கைகள் என்பது, சற்று அதிகமாக உள்ளது. பாதி உடல் அழகான பெண்ணாகவும், மீதி உடல் மீன் போலவும் இருக்கும் என்று கூறப்படும் இந்த உயிரினங்கள், ஆழ் கடலில் வசிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு இருக்க, ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதுதான் உண்மையான கடற்கன்னிகளா? அல்லது AI-ஐ ஆல் உருவாக்கப்பட்ட ஒன்றா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதோடு, நள்ளிரவில் கடலில் செல்லும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கப்பலின் இரண்டு புறங்களிலும், விநோதமான உயிரினம் ஒன்று, மிகவும் வேகமாக நீந்திக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த ஒருசிலர், இது உண்மையான கடற்கன்னி என்றும், ஒருசிலர் இது வேறு ஏதேனும் உயிரினமாக இருக்கலாம் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News