இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, தற்போது நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர், தனது நெருங்கிய தோழியும், பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் விவாகரத்து செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீப காலங்களாக, காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சில சினிமா பிரபலங்கள், விவாகரத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.