கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்திற்கு பிறகு, சரித்திர கால கதை ஒன்றை, அவர் தயார் செய்து வைத்திருந்தார்.
மேலும், ரஜினி, சிம்பு ஆகியோரிடமும், கதையை சொல்லி, பாராட்டை பெற்றிருந்தார். ஆனால், இந்த Project, பட்ஜெட் பிரச்சனையின் காரணமாக, Take Off ஆகவில்லை. இவ்வாறு இருக்க, இந்த படத்தில் நடிப்பதற்கு, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால், அஜித் நடிக்கும் முதல் பேன் இந்தியன் படமாக, இது மாறும் என்று கூறப்படுகிறது. இதற்கு அஜித் ஒத்துக்கொள்வாரா? அல்லது வேறு இயக்குநரை தேர்வு செய்வாரா? என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.