கோவையில் அண்ணாமலை தோல்வியா?..பாஜகவுக்கு ஷாக் கொடுத்த கருத்துக்கணிப்பு

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைவார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது. இதில் பெரும்பாலும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்தது.

தமிழகத்தில் கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளர் பி.கணபதி ராஜ்குமார் அமோக வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்பில் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை,எங்களுக்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று அக்கட்சியினர் கூறி வரும் நிலையில், அதற்கு எதிராக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளதால், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News