ஆர்யா, சந்தானம் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். சந்தானத்தின் கமெடிக்காகவே இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் வரும் மிகவும் பேமஸான காமெடி டயலாக் எங்கிருந்து திருடப்பட்டது என்று சந்தானம் தெரிவித்துள்ளார். அதாவது, சந்தானத்தின் அப்பாவிற்கு சென்ஸ் ஆஃப் ஹுயுமர் அதிகமாம்.
ஒரு தடவை அவர் யதார்த்தமாக, ஊருல 10,15 குழந்தைங்க வச்சி இருக்கிறவ எல்லாம் சந்தோசமா இருக்கான், ஆனா ஒன்னே ஒன்னு வச்சிகிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கேனு சொல்லியிருக்கார்.
இதை அப்படியே கேட்ச் பண்ணி, குழந்தை என்கிற வார்த்தைக்கு பதில் ப்ரெண்ட்ஸ் என்று மாற்றி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ரசிகர்களை வேற லெவெலில் சிரிக்கவைத்திருப்பார்.
மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இது போன்ற யதார்த்த காமெடியில் சந்தானம் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.