இந்தியாவின் நிழல் உலக தாதாவாக இருந்து வந்தவர் தாவூத் இப்ராஹிம். மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இவர், அந்த சம்பவத்திற்கு பிறகு, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
மேலும், இவர் துபாய், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இவ்வாறு இருக்க, தாவூத் இப்ராஹிம்-க்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய 3 நகரங்களில், நேற்று இரவு 8 மணியில் இருந்து, தொலைதொடர்பு சாதனங்களில், இணைய சேவை முடக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான காரணமாக என்ன கூறப்படுகிறது என்றால், நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கலாம் என்றும், அதனை வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமல் மறைப்பதற்காக, இவ்வாறு செய்திருக்கலாம் என்றும், கூறப்படுகிறது.
இந்த தகவல் அதிர்ச்சியை தரும் அதே வேளையில், இன்னொரு காரணம் ஒன்றும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அதாவது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆலோசனை கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்தியதாகவும், அதனை தடுப்பதற்காக இணைய சேவை முடக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு காரணங்களும், இணைய வெளியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் தொலைதொடர்பு ஆணையம், இதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.