வடிவேலு-விஜய்சேதுபதி படத்தை இயக்குவது இவரா?

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த வைகைப் புயல் வடிவேலு, கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது, மீண்டும் நடிக்க துவங்கிய இவர், மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், வடிவேலுவும், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும், புதிய படம் ஒன்றில் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் இந்த படத்தை, இயக்குநர் மிஷ்கின் இயக்க இருப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தான் இயக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.