Connect with us

Raj News Tamil

உலகக் கோப்பைக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?

விளையாட்டு

உலகக் கோப்பைக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், 2023-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 241 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருந்தது. இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி, முதலில் தடுமாறினாலும், ஓவர்கள் செல்ல செல்ல, விக்கெட்டை இழக்காமல், வெற்றிக் கனியை பறித்தது.

இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு, 6-வது முறையாக உலகக் கோப்பை வழங்கப்பட்டது. கோப்பை பெற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்கள், மைதானத்தில், தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், அனைத்து கொண்டாட்டங்களும் முடிந்த பிறகு, மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையை அவமானப்படுத்தினார். அதாவது, அந்த உலகக் கோப்பையின் மீது, தனது கால்களை போட்டுக் கொண்டு, புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 6 முறை உலகக் கோப்பை வாங்கிவிட்டதால், திமிராக நடந்துக் கொள்கிறார்கள் என்றும், உலகக் கோப்பைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்றும், கருத்துக் கூறி வருகின்றனர்.

இவர் மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கைகள் எழுந்தள்ளது. உலகக் கோப்பைக்கு அவமரியாதை செய்துள்ள இந்த மிட்சல் மார்ஷ் தான், வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் T20 உலகக் கோப்பையில், கேப்டனாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி இதுவரை, 1987, 1999, 2003, 2007, 2015, 2023 ஆகிய 6 ஆண்டுகளில், சாம்பியன் பட்டங்களை பெற்றுள்ளது. மேலும், 1975, 1996 ஆகிய இரண்டு ஆண்டுகளில், ரன்னர் அப் பட்டங்களை பெற்றுள்ளது.

More in விளையாட்டு

To Top