அரசிலில் இருந்து கமல்ஹாசன் ஒதுங்குகிறாரா..? தமிழக அரசியல் பரபரப்பு..!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன். பின்னர் சினிமாவில் இருந்து சற்று விலகியே காணப்பட்ட இவர்,கடந்த 2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார்.

இந்த நிலையில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் விதமாக இவர் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் சினிமா மீதான கமலின் காதல் மலர்ந்துள்ளதாக திரை வட்டாராங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தியன் 2, விக்ரம் 2, பா.ரஞ்சித், மனிரத்தினம், எச். வினோத் ஆகியோருடன் என பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் தீவிர அரசியலில் எப்படி ஈடுபடுவார்..? என தொண்டர்கள் குழம்பியுள்ளனர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.