தயாரிப்பில் இருந்து விலகுகிறதா லைகா?

விஜயின் கத்தி திரைப்படத்தின் மூலம், சினிமா தயாரிப்பில் நுழைந்தது லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு பிறகு, 2.0, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தது.

ஆனால், சமீப காலங்களாக, சந்திரமுகி 2, இந்தியன் 2 ஆகிய தோல்வி படங்களையும், வேட்டையன், விடாமுயற்சி ஆகிய சுமார் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது. இதனால், இந்த நிறுவனம் கடன் சுமையில் இருப்பதாகவும், சினிமா தயாரிப்பை, சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாகவும், கூறப்பட்டு வந்தது.

இவ்வாறு இருக்க, லைக்கா நிறுவனம் மீண்டும் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2 மிகப்பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன்மூலம், ஏற்கனவே பரவிய தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News