ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. ரஜினி – பி.வாசுவின் கூட்டணியில் உருவான சந்திரமுகி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
S.J.சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், சந்திரமுகி 2 படத்தின் வெளியீடு 15ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் படத்தின் இயக்குனரான பி.வாசு, படத்தின் 480 கிராபிக்ஸ் காட்சிகள் இறுதி நேரத்தில் காணாமல் போய்விட்டதாகவும், அவற்றை கண்டுபிடிக்க 4,5 நாட்கள் ஆனதாலேயே படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது என்று கூறியிருக்கிறார். சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தாமதமானதற்கு, இது தான் உண்மையான காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.