டென்னிஸ் விளையாட்டில் இந்தியா அணி சார்பில் விளையாடி வந்தவர் சானியா மிர்ஸா. பல்வேறு முக்கியமான பட்டங்களை வென்றுள்ள இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை, கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2023-ஆம் ஆண்டு அன்று, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன், கடந்த சில நாட்களாக, சானியா மிர்ஸா டேட்டிங் சென்று வருவதாக, பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், அந்த நடிகர் யார் என்பது, இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மேலும், சானிய மிர்ஸாவின் திருமணம் பற்றி பரவும் தகவல், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.