ட்விட்டரில் இப்படி ஒரு மாற்றமா? மஸ்கின் அதிரடி அறிவிப்பு !

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி , கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியான லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், எலான் மஸ்க் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம். நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்று கூறினார். வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து , டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறியிருந்தார் ,எனவே மஸ்கின் தற்போதைய அறிவிப்பானது ட்விட்டர் பயனாளிகளை எதிர்பார்ப்பிற்க்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News