எச்.வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இந்த திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை, கே.வி.என். புரொடக்ஷன் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் கதை தொடர்பான தகவல் ஒன்று தற்போது பரவி வருகிறது.
அதன்படி, தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மையப்படுத்தி, இந்த திரைப்படம் உருவாகி வருகிறதாம். மேலும், அனல் தெறிக்கும் வகையில், பல்வேறு அரசியல் வசனங்கள், இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.