தங்கலான் படத்தின் கதை இதுதானா? இது சூப்பரா இருக்கே!

தங்கலான் படத்தின் டிரைலர் சமீபத்தில் Youtube பக்கத்தில் வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், தங்களது பாராட்டுக்களை, படக்குழுவினருக்கு தெரிவித்து வந்தனர்.

ஆனால், ஒருசில நெட்டிசன்கள், அனு அனுவாக டிரைலரை பார்த்து, அப்படத்தின் கதை இதுவாக இருக்கலாம் என்று தங்களது யூகங்களை கூறி வருகின்றனர்.

அதன்படி, புதையல் வேட்டைக்கு ஒரு வெள்ளைக்காரர் செல்லவதாகவும், அதற்கு விக்ரமின் சமூகத்தை சேர்ந்தவர்கள் உதவுவதாகவும், அப்போது மந்திர சக்தி கொண்டவர்கள் அதை தடுப்பதாகவும் கதை இருக்குமாம்.

பின்னர், அந்த மந்திர சக்தி கொண்டவர்கள் இவர்களை ஏன் தடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை விக்ரம் அறிந்துக் கொள்கிறாராம்.

இதையடுத்து, அந்த மந்திர சக்தி கொண்ட கும்பலுடன் சேர்ந்து, வெள்ளைக்காரரை எதிர்ப்பது தான் கதை என்று கூறப்படுகிறது. இந்த யூகங்களே இவ்வளவு சுவாரசியமாக இருக்கும்போது, படமும் நிச்சயமாக சுவாரசியமாக இருக்கும் என்று, விக்ரமின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News