இந்தியா
புஷ்-அப்பில் கின்னஸ் சாதனை வென்ற அம்ரித்பீர்சிங் !வெற்றிக்கு இது தான் காரணமா?
சமூகவலைதளங்கள் பெருகிவருவதால் சமீப காலமாக சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தங்களது திறமைகளை நிரூபித்து,கின்னஸ் சாதனையும் படைத்து வருகின்றனர்.
இந்நிலையில்பஞ்சாப்பை சேர்ந்த குவார் அம்ரித்பீர்சிங் என்ற வாலிபர் புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உமர்வாலா என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான குவார் அம்ரித்பீர்சிங் தனது முதுகில் 20 பவுண்ட் எடை கொண்ட பேக்கை சுமந்து கொண்டு ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 86 புஷ்-அப்களை செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இவரது புஷ் அப் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்குகளை மலைபோல் குவித்து குவித்து வருகிறது.அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குவார் அம்ரித்பீர்சிங் கூறுகையில், நான் இந்த சாதனைக்காக ஜிம்முக்கு சென்றதில்லை. சத்தான உணவு வகைகளையும் எடுத்ததில்லை ,வழக்கமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றினேன் என்று எவரும் எதிர்பார்க்காத பதிலளித்து அசத்தியுள்ளார்.
