துணிவு படத்திற்காக சுமார் 20 கிலோ வரை அஜித் தனது உடல் எடையை குறைத்திறந்தார். அதன் பின் மீண்டும் உடல் எடை அதிகரித்துவிட்டது.
இந்நிலையில், அஜித், ரசிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், உடல் எடையை குறைத்து, அஜித் பிட்டாக காட்சியளிக்கிறார். இவர் லுக்கை பார்த்த அவரது ரசிகர்கள், விடாமுயற்சி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.
மேலும், ஆகஸ்ட் 21ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.