தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்சேதுபதி, மகாராஜா, விடுதலை 2 ஆகிய படங்களின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். இந்த வெற்றிக்கு பிறகு, தற்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில், நடிகை நித்யா மெனனும், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்து, புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆகாச வீரன் என்று இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.