ஐயப்ப சுவாமியை பற்றி இழிவாக பாடிய இசைவாணி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அமைச்சர் சேகர்பாபுவை, எச்.ராஜா வலியுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி முருகன் கோவிலுக்கு வந்த பாஜகவின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா, சாமி தரிசனம் செய்து, முருகனை வழிபட்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐயப்ப சுவாமியை பற்றி இழிவாக பாடிய இசைவாணி மீதும், அவரை ஆதரித்து பேசிய இயக்குனர் ரஞ்சித் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, வலியுறுத்தினார்.
மேலும், கஸ்தூரியை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைத்த தமிழக அரசு, இசைவாணியை மட்டும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, பா.ம.க மூத்த தலைவர் ராமதாஸை விமர்சனம் செய்ததற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.