Connect with us

Raj News Tamil

அனுமதியில்லாமல் கட்டப்பட்ட ஈஷா ஆதியோகி சிலை…நடவடிக்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்

அனுமதியில்லாமல் கட்டப்பட்ட ஈஷா ஆதியோகி சிலை…நடவடிக்கை நீதிமன்றம் உத்தரவு

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா ஃபவுண்டேஷனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா ஃபவுண்டேஷன் நிர்வாகி பெறவில்லை. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை” என்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top