வர்ணனையாளராக மாறும் இஷாந்த் சர்மா!

இஷாந்த் சர்மா இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 2-வது வேகப்பந்து வீச்சாளர் ஆவர். உலகின் தலைசிறந்த பேட்டரான ரிக்கி பாண்டிங்கின் விக்கெட்டினை 19-வது வயதிலேயே எடுத்துள்ளார்.

இவர் 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.

80 ஒருநாள், 105 டெஸ்ட், 14டி20 போட்டிகள் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா முதன்முறையாக வர்ணணையாளராக களமிறங்க உள்ளார். 34 வயதான இஷாந்த் சர்மா இந்தியா – மே.இ.தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ஹிந்தி வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

RELATED ARTICLES

Recent News