இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.
இந்த பதில் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அத்துடன், ஹமாஸ் பயங்கரவாதிகள் பலரும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் பலவாறாக இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து செல்லும் வழிகளெல்லாம் தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை எதிர்கொள்ளும் நடவடிக்கையிலும், துரிதமான பதில் தாக்குதலிலும் ஈடுபட்டது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் நிலைகளை நோக்கி வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் 500 பேர் உயிரிழந்ததாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நிகத்திய தாக்குதல்களில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, காஸாவில் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய ராணுவனத்தினர் பலரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.