Connect with us

Raj News Tamil

கடும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.! காசாவில் 21 ஆயிரமாக எகிறிய பலி எண்ணிக்கை .!

உலகம்

கடும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.! காசாவில் 21 ஆயிரமாக எகிறிய பலி எண்ணிக்கை .!

இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது வேகமான தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு காசாவும் தங்களால் முடிந்தவரை பதிலடி கொடுத்து வருகிறது.தற்போது காசா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 பேர் உயிரிழந்தனா்; 382 பேர் காயமடைந்தனா்.

மேலும்,உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20,915-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 54,918-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடமான அகதிகள் முகாமில் தற்போது இஸ்ரேல் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top