ஐ.நா சபை கூட்டம்.. பாலஸ்தீனத்திற்கு கிடைத்த வெற்றி.. ஆவணத்தின் நகலை கிழித்த இஸ்ரேல் தூதர்!

இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்சனை என்பது, பல்வேறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பிரச்சனையில், ஒருசில நாடுகள் இஸ்ரேலுக்கும், ஒருசில நாடுகள் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாக செயல்பட்டு வந்தன.

இவ்வாறு இருக்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், பாலஸ்தீனத்தை உறுப்பினராக மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தி, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இதில், 25 நாடுகள் வாக்களிக்கவே இல்லை. இதனையடுத்து, ஐ.நாவின் உறுப்பினராக பாலஸ்தீனத்திற்கு உரிமை கிடைத்துள்ளது.

இந்நிலையில், ஐ.நா-வுக்கான இஸ்ரேல் தூதர் கிலட் எர்டன், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், அதன் ஆவணத்தின் நகலை ஷெரெட்டர் என்று அழைக்கப்படும் கருவியின் மூலம், சுக்குநூறாக கிழித்தார்.

இதையடுத்து, பேசிய அவர், “நீண்ட நாட்களாக, உங்களில் பல பேர் யூத வெறுப்பாளர்களாக இருந்தீர்கள். ஆனால், பாலஸ்தீனியர்கள் அமைதியை விரும்புபவர்கள் அல்ல என்பதை பற்றி, நீங்கள் கவலைப்படவும் இல்லை” என்று கூறினார். மேலும், “உங்களை நினைத்தால் அவமானமாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அடையாளம் கொடுப்பட்டதற்கு எதிராக இவர் செய்த செயலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News