Connect with us

Raj News Tamil

திரை பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவில்லை – அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

தமிழகம்

திரை பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவில்லை – அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தனியார் அமைப்பு ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கம் அரசு நிகழ்ச்சிக்காகவும், அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ மாணவர்கள் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

“இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில்” என்ற அமைப்பை சார்ந்த ஹரிஷ் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கை வாடகைக்கு கேட்டுள்ளார். அதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட லெட்டர் பேடுடன் வந்து மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கேட்டு உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியின் கடிதம் என்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவராக பயன்படுத்தி திரை பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது எங்களுக்கு தெரியவந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு முன் சிண்டிகேட் கூட்டம் கூடிய பிறகு முறையாக தான் பட்டமளிப்பு விழா நடைபெறும். இங்கு நடைபெற்றது அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அல்ல என்றார். மேலும் இங்கு நிகழ்ச்சி நடத்தியவர்களை தொடர்பு கொள்ளும்போது அவர்களது தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் அவர்களை தொடர்பு கொள்ளும் போதும் பதில் ஏதும் கிடைக்க வில்லை.

அனுமதிக்காக அவர்கள் வழங்கிய நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்து விட்ட லெட்டர் பேடும் போலியானதாக இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியிருந்தால் எங்களது வழக்கறிஞரின் ஆலோசனையின் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அழிக்கப்படும் என்றும் கூறினார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top