உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி தொகுதியில், வரும் ஜூன் 1-ஆம் தேதி அன்று, தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதியில், பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.
இதனையொட்டி, இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வாரனாசி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக, எனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தேன். இந்த தொகுதியின் வரலாற்று சிறப்பு மிக்க மக்களுக்கு சேவை செய்வது, பெருமையாக உள்ளது.
பொதுமக்களின் ஆசியுடன், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையை நிகழ்த்துவேன். எதிர்காலத்தில், பணியாற்றும் வேகம் இன்னும் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, “NDA கூட்டணியின் தலைவர்களின் வருகையின் மூலம், நான் இன்று காசி பகுதியில் கௌரவிக்கப்பட்டேன். எதிர்காலத்தில், இந்தியாவின் வளர்ச்சிக்காக, நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்.