தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், நடிகை சிம்ரன் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது, சக நடிகை தன்னிடம் மோசமாக பேசியது குறித்து அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அதாவது, “ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என்று சக நடிகை ஒருவரிடம் நான் கேட்டிருந்தேன். அதற்கு, உங்களை போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதை விட இது சிறந்தது என்று அவர் கூறியிருந்தார்” என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் 25 வயதிலேயே, கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற படத்தில், முக்கியமான ஆன்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதை விட ஆன்டி கதாபாத்திரங்களில் நடிக்கலாம்” என்று, அந்த நிகழ்ச்சியில், தனக்கு நடந்த சம்பவத்தை அவர் விவரித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், எந்த நடிகை குறித்து சிம்ரன் பேசியுள்ளார் என்று, ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.