இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவராக பாலச்சந்திரன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த வருடத்தில், மழையின் அளவு எவ்வாறு இருந்தது என்றும், இதற்கு முன்பு அளவுடன் ஒப்பிட்டும் பேசியிருந்தார். அவர் பேசிய முழு விவரம் பின்வருமாறு:-
“2024-ல் 4 புயல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம்” என்று தெரிவித்தார். மேலும், “வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்தார்.