ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாது..!

வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை காரணமாகவும் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன.

இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை டோக்கன் அல்லது டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. டோக்கன் அல்லது டிக்கெட் இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலாது என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News