உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது ரொம்ப தாமதம் – பொன்முடி..!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பேற்க அனைத்து நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் தலைமை செயலகத்தில் இவருக்கான அறை ஒதுக்கீடு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக ராஜ் பவனில் 14-ஆம் தேதி பொறுப்பேற்க ஆளுநரிடம் ஒப்புதலும் பெறப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுவே ரொம்ப தாமதம் எனக் கூறினார். நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். அப்போதே அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது என்றார்.