தமிழகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் வீடுகளில் தொடர்ச்சியாக ரெய்டு செய்யப்படுவது வாடிக்கையாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. மேலும் அவர் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் மதுரையில் உள்ள அலுவலகம்,வீடுகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் 2020-ஆம் ஆண்டில் இவரது வீடு மற்றும் நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டு 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,அதோடு கணக்கில் வராத பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் தயாரிப்பாளர்களிலே ராஜாவாக திகழ்ந்துவருகிறார்.இந்த நிகழ்வு சினிமா பைனான்சியர் மத்தியில் பெரும் கலக்கதை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு-வின் வீடு,மற்றும் அவர் தொடர்புடைய அலுவலங்கள்,நிறுவனங்கள் போன்ற 20-வது இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.இவர் கபாலி,அசுரன் போன்ற பிரமாண்ட திரைப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவரது வி கிரியேஷன்ஸ் மற்றும் கலைபுலி ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து எஸ்.ஆர் பிரபு-வின் நிறுவனம் மற்றும் தேனம்பேட்டையில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யாவின் உறவினருமான ஞானவேல் ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் அடுத்தடுத்து சினிமா பைனான்ஸ்சியர், தயாரிப்பாளர் வீடுகளில் நடைபெறும் ரெய்டால் கோலிவுட் தயாரிப்பாளகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் கோலிவுட் சினிமா தேசிய விருதுகள் அள்ளிக்குவித்த நிலையில் , ஐ.டி ரெய்டு செய்யப்படுவது கோலிவுட் சினிமாவை பதற்றத்தில் அழ்த்தியுள்ளது.கோலிவுட்டில் கணக்கில் வராத பணத்தில் சினிமா தயாரிப்பதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.