உலக புகழ்பெற்ற கால்பந்து வீரரும் அஜித் ரசிகரா?

உலக கால்பந்து போட்டி, கத்தார் பகுதியில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கலந்துக் கொண்டுள்ளன.

ஆனால், 4 முறை உலகக் கோப்பை வென்ற இத்தாலி அணி, இந்த முறை உலகக்கோப்பைக்கு தேர்வாகவில்லை. இந்நிலையில், இத்தாலி அணியின் கால்பந்து வீரர் மரியோ பாலோடெல்லி, வலிமை பட காட்சியை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது கால்பந்தாட்ட அணியை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தான், அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பதிவு, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.